ஓரினியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 2 கோடி பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது தேர்தல் நேரங்களில் தமிழக மக்களின் வீட்டு கதவை தட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். நாங்கள் அரசு திட்டங்களை எடுத்துக் கூறி தைரியமாக மக்களை சந்தித்து பேசுகிறோம். உங்களைப் போல அமித்ஷா வீட்டுக்கதவையோ, கமலாலயத்தின் கதவையா திருட்டுத்தனமாக தட்டவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்குள் அதிமுக இல்லை என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
