2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதிலிருந்து களப்பணிகளில் ஈடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் தான் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டமாக நாளை மறுநாள் ஜூன் 7-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.