தமிழக பாஜக கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தற்போது நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த நிலையில் தமிழக பாஜக கட்சியில் இணைந்த கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். ஆனால் சமீப காலமாக தமிழக பாஜக கட்சி பிராமணர்களுக்கு எதிராக செயல்படுவதாக அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பாஜக கட்சியை விட்டு தான் முழுமையாக விலகி விட்டதாக அவர் அறிவித்துவிட்டார். மேலும் அண்ணாமலை மற்றும் அவரின் தலைமையை விமர்சித்து வந்த அவர் திமுக கட்சி பிராமணர்களுக்கு நல்லது செய்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.