
சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அவர்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதிலும் முக்கியமாக சேலம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.