தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 51 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கட்சியை எதிர்க்கட்சிகள் விளாசி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 3 வருடங்களில் கள்ளச்சாராயம் தொடர்பாக 14,606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 10,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதேப்போன்று 3 வருடங்களில் மட்டும் 4,61,084 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.