திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மீனவ கிராமத்தில் மீனவரான சிலுவை தாஸ் நேவிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கின்றனர். நேற்று காலை சிலுவை உள்பட 7 பேர் அதே பகுதியைச் சேர்ந்த வெலிங்டன் என்பவரது நாட்டுப்படையில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது படகில் இருந்தபடி மீனவர்கள் மீனுக்கு வீசிய வலையை இழுத்த போது எதிர்பாராதவிதமாக சிலுவை கடலுக்குள் தவறி விழுந்தார்.

அவரை சக மீனவர்கள் மீட்க முயன்றனர். அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார். இதுகுறித்து அறிந்த கடலோர பாதுகாப்பு படை நறும் மீனவர்களும் சிலுவையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் தவறி விழுந்த அதே இடத்தில் மீன் வலையில் சிக்கியவாறு சிலுவை சடலமாக கிடந்ததை கண்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.