முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் துரைமுருகன் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி கூவி கூவி அழைக்கிறார். ஆனாலும் யாரும் வரவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, முதலில் உங்கள் கூட்டணி கட்சியை பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமும் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்போது உடையும் என்றே தெரியவில்லை.

அதை முதலில் பாருங்கள் என்று கூறினார். அதிமுக என்பது ஐஎஸ்ஐ மாதிரி தனி முத்திரை உள்ள கட்சி என்றும் தெரிவித்துள்ளார். இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திமுக ஆட்சியில் 98 சதவீதம் நிறைவேற்றபற்றதாக கூறுகிறார். எங்கு நிறைவேற்றப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கேட்கிறார். அப்போது கூட்டணி கட்சிக்குள் விரிசல் இருக்கு தானே என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.