
கேரளா மாநிலம் பண்ணூரை அடுத்துள்ள பகுதியில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த வாரம் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது, அதில் சில பேர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அவர்களது கொண்டாட்டம் அப்பகுதியினருக்கு கடும் தொந்தரவை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து 18 நாட்களை ஆன குழந்தை ஒன்று இருந்துள்ளது.
இந்த இரைச்சலும், வெடிச்ச சத்தமும் அந்த பிஞ்சு குழந்தை தாக்கி உடல் பாதிப்படைந்தது. இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினார். மணமக்கள் அழைப்பின் போதெல்லாம் அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதும் சத்தம் போடுவதும் வாடிக்கையாக இருக்கிறது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மணமக்கள் கொண்டாட்டத்தை வெடி இல்லாமல் கொண்டாடினால் எல்லோருடைய மனமும் நிறையும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.