சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே சென்ற மின் கம்பியில் பஞ்சு மூட்டைகள் உரசியது. இதனால் பஞ்சு முட்டை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை அறியாமல் வெங்கடேஷ் லாரியை ஓட்டி சென்றார்.

சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியது. உடனடியாக வெங்கடேஷ் வாகனத்தை நிறுத்தி கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.