
அமெரிக்காவில் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தற்போது பென்ச் மார்க் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு டாலர் மதிப்பு குறைந்ததும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி தங்கத்தின் ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 0.9% வரை உயர்ந்துள்ளது.
இதனால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2592.39 டாலர்களாக இருக்கிறது. இதேபோன்று அமெரிக்க தங்கத்தின் பியூச்சர்ஸ் விலை 0.2சதவீதம் வரை உயர்ந்து ஒரு அவுன்ஸ் 2598.60 டாலர்களாக இருக்கிறது. இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் இதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் இந்திய தங்கச்சந்தையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.