கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பாக பிப்,. 6ம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் பிப்,.14 ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்நாளில் அன்பு உணர்வு பரவும் மற்றும் கூட்டு மகிழ்ச்ச்சி ஊக்கப்படுத்தப்படும். அதோடு பசுக்களை கட்டிப்பிடிப்பது உணர்ச்சி வளம் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும் என கூறியுள்ளது. இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கருத்து மோதல் நடந்து வருகிறது.

பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பசுமாடு பாதுகாப்பு சார்ந்து பல திட்டங்களை உருவாக்கியது. இந்நிலையில் மேற்குவங்க மக்களவை உறுப்பினர் மஹு மொய்த்ரா “தற்போது அரசாங்கம் நமக்காக காதலர் தின திட்டங்களை வகுத்துள்ளது” என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். பிப்.,.7ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை காதலர் தின வாரம் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.