2023 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை கடந்த பிப்,.1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) போன்றவற்றின் டெபாசிட் வரம்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி எஸ்சிஎஸ்எஸ் டெபாசிட் வரம்பு ரூபாய்.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின் பிஓஎம்ஐஎஸ்-க்கான டெபாசிட் வரம்பு ரூபாய்.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டு இருக்கிறது. பிஓஎம்ஐஎஸ்-ன் கீழ் கூட்டுக்கணக்குகளுக்குரிய டெபாசிட் வரம்பு ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்சிஎஸ்எஸ் மற்றும் பிஓஎம்ஐஎஸ்-க்கான உயர்த்தப்பட்ட டெபாசிட் வரம்பு, மூத்தக்குடிமக்களுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு எதிர்கால தேவைக்காக பெரியளவில் சேமிக்க உதவும்.