
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வைப்புத் தொகைக்கான வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தி உள்ளது. அதிகபட்சமாக 400 நாட்களுக்கான வைப்புத் தொகைக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 முதல் 45 நாட்களுக்கு 3.5 சதவீதம், 46 முதல் 179 நாட்களுக்கு 4.5சதவீதம், 180 முதல் 270 நாட்களுக்கு 6.25 சதவீதம், 271 முதல் 299 நாட்களுக்கு 6.50%, 300 நாட்களுக்கு 7.05% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.