
சென்னையில் மாதவரத்தில் நடந்த கொடூர சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. 53 வயதான சுரேசந்தர், 35 வயதான அவரது மனைவி மல்லி, மற்றும் சுரேசந்தரின் மகன் சிவா, மல்லியின் முதல் கணவருக்கு பிறந்த 15 வயது சிறுமியுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர். அந்த சிறுமி, பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து, பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், வளர்ப்புத் தந்தை சுரேசந்தர் மற்றும் அவரது மகன் சிவா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் தந்தையும், மகனும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
சம்பவத்தில் சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது, அந்த சிறுமி குழந்தைகள் நலத்துறையினரால் பாதுகாப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கைதான மூவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.