திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலைய சாலையில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் ரமேஷ்பாபுவின் வீட்டிற்கு அருகே எச்சில் துப்பியதாக தெரிகிறது. இதனை பார்த்த ரமேஷ் பாபு முருகனை கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முருகனும், அவரது மகன் வீரபாகுவும் இணைந்து ரமேஷ்பாபுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரமேஷ் பாபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகன், வீரபாகு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.