திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் விவசாயியான தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று தங்கவேல் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி விசாரித்தனர்.

அந்த விசாரணையில், நில பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தங்கவேல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கதாகும்.