தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஒபலி கிருஷ்ணா தற்போது பத்து தல என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்தார்.

இந்த படம் மார்ச் மாதம் 30-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் பத்து தல திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த தகவலை படக்குழு தங்களுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.