மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி  மலையாள டிவி சேனலில் ஒளிபரப்பான சினிமாலா எனும் நிகழ்ச்சியின் மூலமாக கேரள மக்களிடையே பிரபலமானவர் சுபி சுரேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பினால் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனையடுத்து ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், கங்கணா சிம்மாசனம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மலையாள சினிமாவிற்குள் காமெடி நடிகையாக வளம் வந்துள்ளார். இவருடைய சினிமாலா நிகழ்ச்சியை போல குழந்தைகளுக்கான குட்டி பட்டாளம் என்ற நிகழ்ச்சியையும் நகைச்சுவை பாணியில்  தொகுத்து வழங்கியுள்ளார்.

அவரது இந்த நிகழ்ச்சி நேயர்களை பெரிதும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கிய சுபி சினிமாவிற்கு சென்ற பின் 2018-ல் மீண்டும் லேபர் ரூம் எனும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வந்தார். இந்நிலையில் கல்லீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கல்லீரல் தொற்று மட்டுமல்லாமல் நிமோனியா பாதிப்பும் இருந்த காரணத்தினால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு செய்தி  மலையாள சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.