
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மாதுரி தீக்ஷித். இவருடைய தாயார் சினேக லதா தீக்ஷித் (90) இன்று காலை 8:40 மணியளவில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். சினேகலதா தீக்ஷித்தின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் மாதுரி தீக்ஷித்தின் தாயார் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.