சாணிக் காயிதம் , பீஸ்ட் , பகாசுரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கும் புது திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் செல்வராகவன். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்டு செய்யும் லால் சலாம் திரைப்படத்திலும் செல்வராகவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் செல்வராகவனை சந்தித்து கதை சொல்லி கால்சீட் வாங்கியுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்போது லால் சலாம் படத்தின் முதற்கட்ட சூட்டிங் காரைக்காலில் நடந்து வரும் நிலையில், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா போன்றோர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் விரைவில் செல்வராகவனும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.