பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக வசதி கொண்ட உயர் அடுக்கு வரிசை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி, மகள் (26) மற்றும் மகன் (22) ஆகியோர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த 2 பேர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் மற்றும் மகளின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் அந்த தகராறு வெடித்தது. இதைத்தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்ற வருகிறது. அந்த விசாரணையில் தகராறு செய்த 2 பேரில் ஒருவர் மூத்த வருமான வரி துறை அதிகாரி என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.