டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷான்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் புது திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதி ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கவுள்ளார்.

பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதி ராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். ஜிவி பிரகாஷின் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இத்திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட இருக்கின்றனர்.