தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சினிமா தியேட்டரில் பட்டாசு வெடிக்க தடை என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சினிமா தியேட்டர் வலாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட் அவுட்டில் தீப்பிடித்து எறிந்தது.
இதன் காரணமாக பிரபல திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பட்டாசு வெடிக்க கூடாது என்று சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லலு திரைப்படம் வெளியானது. அப்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சினிமா தியேட்டர்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
