நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். குறிப்பாக விழுப்புரம், சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட பதவி விலகி வருகின்றனர். அப்படி விலகி வரும் போது, அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடையாது எனவும், தேர்தலில் மாவட்ட செயலாளர்களை கலந்து ஆலோசனை செய்யாமல் அவருடைய இஷ்டப்படி வேட்பாளர்களை நியமிப்பதாகவும் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது.

இப்படி நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் பலர் விலகி வரும் நிலையில், தற்போது சீமான் அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்தடுத்து கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதை தடுக்கும் முயற்சியில் சீமோன் இறங்கியுள்ளார். குறிப்பாக கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளை சேர்ந்து நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். இதனால் அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தெளிவு படுத்தி வருகிறார். இதனால் அதிருப்தி மனநிலையில் இருந்த நிர்வாகிகள் பலர் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.