
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவருடைய மனைவி ரித்திகா சஜ்தேவி. இவரின் தம்பி குணால் சஜ்தேவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ரோகித் சர்மா இன்று தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா ஒரு நாள் போட்டியின் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய மனைவியின் தம்பியின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ள ரோகித் சர்மா போஜ்புரி பாடலுக்கு அவர் மனைவியுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். மேலும் ரோகித் சர்மா நடனமாடும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Rohit Sharma's dance at his brother-in-law's marriage. pic.twitter.com/TTqalgeQH2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2023