பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் போன்றவைகளில் செல்வார்கள். சாலை வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் படகுகளில் ஆறு மற்றும் குளம், ஏரி போன்றவற்றை கடந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது ஒரு மாணவன் கல்லூரிக்கு பாராகிளைடிங் மூலம் பறந்து கொண்டே சென்றுள்ளார். அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்தாரா மாவட்டத்தில் பசராணி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 19 வயது சமர்த் மகான்காடே என்ற வாலிபர் வசித்து வருகிறார்.

இவர் சம்பவ நாளில் அந்த பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு சென்றுறிருந்ததால் அவரால் தேர்வில் உரிய நேரத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மாணவர் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பாராகிளைடிங் குழுவினர் உரிய நேரத்தில் கல்லூரிக்கு சென்று விடுவதாக கூறினர். அதன்படி அந்த குழுவை சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பத்திரமாக அந்த மாணவனை கீழே இறக்கி விட்டார். அந்த மாணவனும் உரிய நேரத்தில் தேர்வுக்கு சென்று விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.