
உலகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஃப்ளோரிடாவிலுள்ள தனது இல்லத்தில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின்க்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இருவரும் உரையாடி உள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. இந்த உரையாடலில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் பேசப்பட்டது என தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறியதாவது, இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது. ரஷ்ய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசியில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தெரிவித்தார். இதேபோன்று தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனும் தொலைபேசியில் பேசியுள்ளார் என தகவல்கள் பரவி வந்தது முக்கியமானதாகும்.