தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  தென் சென்னையை பொறுத்தவரை இந்தியாவினுடைய  மற்ற  மாநிலங்களை பாருங்கள்.  பெங்களூரு பாருங்க, வளர்ச்சியை பாருங்க  ….  இந்தியாவின் மற்ற  மாநிலத்தில் இருக்கக்கூடிய பெருநகரத்தின் வளர்ச்சி பாருங்க. எந்த அளவுக்கு சென்னை கீழே போக ஆரம்பிச்சிருக்குன்னு பாருங்க….  இதை எல்லாம் மக்கள் கிட்ட சொல்லுங்க… 

ஓட்டு போடாதவர்களை மோட்டிவேட் பண்ணனும். ஒரு ஐடி கம்பெனி ஆட்கள்…. தென் சென்னை நமக்கு தெரியும் வாக்கு சதவீதம் 50 சதவீதம்,  48 சதவீதம் தான் இருக்கக்கூடிய ஒரு தொகுதி. அப்போ படித்தவர்களை எப்படி நீங்கள் பூத்துக் கொண்டு வருவீங்க ? எலக்சன் கமிஷன் புது ரூல் போட்டு இருக்காங்க….  எங்கே ஆயிரம் வாக்காளர்கள் ஒரே இடத்தில் இருக்கிறாங்களோ, பூத்து கமிட்டி அங்கேயே அமைக்கப்படும் என்று புது ரூல்,  2024இல் வருது.

அப்போ தென் சென்னை பொறுத்தவரை எங்கெல்லாம் பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் இருக்கு. அங்கு ஆயிரம் வாக்காளர்கள் ஒரே இடத்தில் இருக்கிறாங்க. ஓட்டிங் பூத் அங்குவந்துரும் . இதை 2024இல் நடைமுறைப்படுத்துறாங்க. முதல் மாதிரி அய்யோ இல்லைங்க……  ஓட்டு போட நாலு மணி நேரம் ஆகும்,காலையில் நான் எந்திரிச்சு ரெடி ஆகி அப்புறம் குழந்தைகள் எல்லாம் அம்மா கிட்ட விட்டுட்டு, அப்புறம் நான் காரை ஸ்டார்ட் பண்ணி அங்க போயி…. ஓட்டிங் பூத் பக்கத்துல பார்க்கிங் இருக்குமான்னு தெரில…

ரெண்டு தெரு தள்ளி பார்க்கிங் எல்லாம் போட்டுட்டு….   அப்புறம் நடந்து போய்,  பூத்து சிலிப் கொடுத்தா, உங்க ஓட்டு இங்கு இல்லை அண்ணே…. உங்க ஓட்டு அங்கு இருக்குன்னு சொல்லுவாங்க. அதுக்கு பிறகு வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்…..திரும்ப கார், டூ வீலர் எடுத்து, அங்கே போனால் முழு நாள் முடிச்சிடும்.அதனாலதான் ஜனநாயகத்தில்  நான் ஓட்டே போடுவதில்லை என்கின்ற முடிவில் இருக்கின்ற நிறையா பேர் இருக்கிறாங்க.

அவுங்கள எப்படி நீங்க கன்வின்ஸ் பண்ணுவீங்க ? அது உங்க சேலஞ்ச். அவர்கள் அனைவரின் ஓட்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய எல்லாருக்கும் தெரியும்.அந்த சேலஞ்சை எப்படி நீங்க முறியடிக்க போறீங்க ? ஓட்டிங் பூத் பக்கத்துல வந்துடுச்சு. அவுங்க எந்த கஷ்டமும் படாம அங்க போய் ஓட்டு போட்டுக்கலாம் என தெரிவித்தார்.