செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூர் மருத்துவக் கல்லூரி டீன் ஆயுத பூஜை,  சரஸ்வதி பூஜைக்கு குறிப்பாக எந்த மதம் சார்ந்த படங்களும் வைக்க கூடாது. ஒருவேளை வைத்திருந்தால் ? பிரச்சனை. எனவே பிரச்சனை வருவதற்கு முன்னால் எடுத்துவிட வேண்டும் என சொல்லி உள்ளார். எடுத்தால் தான் பிரச்சனை வரும். காலம் காலமாக அது பெயரே ஆயுத பூஜை, விஜய தசமி, சரஸ்வதி பூஜை,  சக்தி பூஜை என்று அர்த்தம்.

என்னன்னா அரசு அதிகாரிகள் எல்லாம் இப்படி பேசினால் தான் இந்த அரசுக்கு பிடிக்கும் அப்படின்னு பேச ஆரம்பிச்சிருக்கிறாங்க. கலெக்டர் கிட்ட சொன்னா..  அப்படி ஒரு சுற்றறிக்கையே இல்லைன்னு சொல்றாரு. இதுல நிச்சயமா சரஸ்வதி படம் இருக்கும், லட்சுமி படம் இருக்கும்,  சக்தி படம் இருக்கும்.   ஆயுதங்களை சக்தி கையில வச்சிருக்கிறதாலே நாம இதை கொண்டாடுகிறோம்.

அதனால் ஒட்டுமொத்தமா ஒரு மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கி தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏன் இந்த மாதிரி சுற்றறிக்கை வருதுன்னு தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒருதலை பட்சமாக நடந்து கொள்பவர்கள் எல்லாம் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். எப்போது உணர்வுகளை புண்படுத்திக் கொண்டு இருப்பது சரியில்லை என்பது எனது கருத்து என தெரிவித்தார்.