
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பொன்னை நதியின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் பாலம் கட்டப்படவில்லை. ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகுதான் கடந்த 1973 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 75 ஆம் ஆண்டில் பாலம் திறக்கப்பட்டது. அதன்பின் பாலம் இருந்து விழுந்து விட்டதால் தற்போது மீண்டும் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் நூறு வருட காலத்திற்கு இடிந்து விழாமல் அப்படியே உறுதியாக இருக்கும். நான் என்னுடைய தொகுதியை பணியாற்றி வருகிறேன். எனக்கு காட்பாடி தொகுதி தான் கோயில். என்னை வளர்த்தவர்கள் இந்த தொகுதி மக்கள் தான். என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரை நன்றி உள்ளவனாக இருப்பேன். என் உயிர் பிரியும் நேரத்தில் கூட காட்பாடி காட்பாடி தான் என்று தான் சொல்லும் என்றார். மேலும் அமைச்சர் துரைமுருகன் நான் சாகும் நேரத்தில் கூட தொகுதி பேரை சொல்லுவேன் என்று உருக்கமாக கூறியது அங்கிருந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.