உலக பணக்காரர் எலோன் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் ஆவார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது ‘வைட் அவேக் பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்று யுவர் ரோல் மஸ்க் பேசியதாவது, ஒபாமா ஒரு ஓரினைச் சேர்க்கையாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்றும், அவர் பெண்ணாக உடை அணிந்த ஒரு ஆணை மணந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2014-ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ் மிச்சல் ஒபாமாவை திருநங்கை என்றும் ஒபமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும் பேசியிருந்தார். அதற்கு 2 வாரங்களுக்கு பின் மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் செப்டம்பர் 4 2014 அன்று இறந்தார். இதை குறிப்பிட்டு பேசிய எரோல் மஸ்க், ஜான் ரிவர்ஸ் அதைப்பற்றி பகிரங்கமாக பேசினார். 2 வாரங்களுக்கு பிறகு அவர் இறந்து கிடந்தார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள் என்றும் கூறினார். மேலும் நிச்சயமாக மிச்சல் ஒபாமா ஒரு ஆண் தான் என்றும், 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக் சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.