ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று பிப்,.16 விசாரணைக்கு வருகிறது. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன்படி அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறது ஈரோடு களம்.