ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி(PF) அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த ஒரு குழுவை, மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கும் CBI அதிகாரிகள், ஆதார் கார்டு விபரங்களைப் பயன்படுத்தி சுமார் 11 EPF அக்கவுண்ட்களிலிருந்து ரூ.1.83 கோடியை மோசடி குழுவினர் திருடியிருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். அதாவது, டெல்லியை சேர்ந்த Priyanshu Kumar தன் கும்பலின் உதவியோடு இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த கும்பல் ஆதார் கார்டை தங்களது PF அக்கவுண்ட்களுடன் இணைக்காத நபர்களை குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 39 போலி PF கிளைம்கள் வாயிலாக 11 ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறிவைக்கப்பட்டு ரூ.1.83 கோடி வரையிலும் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக CBI குற்றம்சாட்டியுள்ளது. அதோடு இந்த கும்பல் பல நகரங்களில் நிறுவனங்களை நிறுவி உண்மையான பயனாளிகளின் (Beneficiaries) UANஐ (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை) பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக Beneficiaries-கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது போல மோசடி கும்பல் காட்டி கொண்டது.

அதாவது, உண்மையான பயனாளிகளின் KYC விபரங்கள் மீதான கட்டுப்பாட்டை பெற இந்த வேலையில் மோசடி கும்பல் ஈடுபட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இந்த கும்பல் ஆதார் தகவல்களை கையாண்டு குறிப்பிட்ட Beneficiaries-களின் PF கணக்கிலிருந்து பணத்தை வெற்றிகரமாக எடுத்து உள்ளது. CBI அதிகாரிகளின் விசாரணையில், பீகார், ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட சில இடங்களிலிருந்து மோசடி கும்பல் பயன்படுத்திய ஆவணங்கள், மொபைல் போன்கள், ATM கார்டுகள், காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ்புக்ஸ் ஆகிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.