இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஊழியர்கள் பலரும் இணைந்துள்ளனர். அதன்படி ஆன்லைன் பிஎப் மற்றும் ஓய்வூதிய பேமண்டுகளுக்கு EPFO பணியாளர்கள் இ-நாமினேஷன் செய்வது அவசியம். PF பயனாளிகள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள UAN நம்பர் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களின் விவரங்களை EPFO வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே அவர்களுக்கு இதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும்.

அதேசமயம் பயனாளர்களின் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை காப்பீடும் கிடைக்கும். மேலும் பயனர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றது போல வாரிசுதாரரை நியமித்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரரை இணங்க சுயசான்று ஒன்றே போதும். வேலை வழங்கும் நிறுவனம் சார்பாக அதற்கு வேறு ஆவணம் அல்லது ஒப்புதல் எதுவும் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.