இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஏராளமான பயனர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது சுய விவரங்கள் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மார்ச் 11ஆம் தேதி EPFO வெளியிட்டது. அதன்படி விண்ணப்பதாரர் தந்தை அல்லது தாயின் விவரங்களில் மாற்றம் செய்வதற்கு தந்தை அல்லது தாயின் பெயர் கொண்ட ஆதார் அட்டை, பான் கார்டு, தந்தை அல்லது தாயின் பெயரில் உள்ள பத்தாவது அல்லது 12 வது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

இதில் பெயர், பிறந்த தேதி, பாலினம், தந்தை மற்றும் தாயின் பெயர், திருமண நிலை, திட்டத்தில் சேர்ந்த தேதி, விலகும் தேதி, ஆதார் எண் போன்ற அனைத்து தகவல்களையும் மாற்றலாம். ஆனால் இதனை திருத்தம் செய்ய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் எளிதில் மாற்றங்களை எப்படி செய்வது?

  • முதலில் EPFO தளத்தில் UAN/Password கொண்டு லாகின் செய்ய வேண்டும்
  • பிறகு Manage>Modify Basic Details என்பதை கிளிக் செய்து மாற்ற வேண்டிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • பிறகு இதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதிகாரிகள் இதனை சரிபார்த்த பிறகு உங்களுடைய விவரங்கள் மாற்றப்படும்.இதனை நீங்கள்  அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.