இந்தியாவில் பெண்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் முன்னணி வங்கிகளில் அமலில் உள்ளது. அதன்படி இந்தியாவின் முன்னணி வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு திறக்கப்படும். இதில் ஒரு கோடி காப்பீடு தொகை உள்ளிட்ட பல சலுகைகள் பெண்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்திற்கு நாரி சக்தி சேமிப்பு கணக்கு என்று பெயர்.

இந்த கணக்கில் தனிநபர் விபத்து காப்பீடும் உள்ளது கூடுதல் சிறப்பாகும். ஒரு கோடி ரூபாய் வரை விபத்து காப்பீடு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் பெண்கள் அடிப்படையிலான சுகாதார மற்றும் நலத்திட்டங்களில் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் லாக்கர் வாடகையில் தள்ளுபடி, இலவச டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது