இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் ரயில் பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக பான்ட்ரி உணவு பெட்டியை இந்திய ரயில்வே வாரியம் நடத்தி வருகின்றது. இதில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிக்கும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கான உணவு விற்பனையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது புதிய விதிமுறைகளின் படி ரயில்களில் உள்ள பாண்ட்ரி கார் பெட்டிகளில் இனி பயணிகளுக்கான உணவு தயாரிக்கப்படாது. இவற்றில் தேவை இருந்தால் மட்டுமே சுடுநீர் மற்றும் தேநீர் தயாரிக்க முடியும். ரயில் நிலையங்களில் உள்ள சமையல் அறைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் ரயில் பயணிகளுக்கான அனைத்து உணவுகளையும் தனியார் நிறுவனங்கள் மூலம் முன்னதாகவே தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கு விநியோகம் செய்ய புதிய நடைமுறை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வழித்தடத்திலும் ஐந்து முதல் ஏழு ரயில்கள் அந்தந்த ஏஜென்சிகள் பொறுப்பாக நியமிக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட ஏஜென்சி ரயில்வே நிலையத்தில் அடிப்படை சமையலறையுடன் பணிகளை தொடங்கும். அதன் பிறகு அங்கிருந்து உணவு வகைகள் பயணிகளுக்கு கொண்டு சேர்க்கப்படும். இந்த புதிய மாற்றமானது வருகின்ற ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.