இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி செய்கின்றது. இந்த நிலையில் நேற்று எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் சேமிப்பு கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தும் 52 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் உடனடியாக 52 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையில், “கனமழையினால் எரிபொருள் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மின்னல் தாக்கி தீ பற்றி எரிந்து இருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.