நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதே சமயத்தில், பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணமும் அளிக்கப்பட்டது. அந்த வகையில் வருமான வரி வரம்பை 7 லட்சமாக அரசு உயர்த்தி இருக்கிறது.

இதன் காரணமாக ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய் இருப்பவர்கள் இனி வரிசெலுத்த வேண்டியதில்லை. அரசு வழங்கிய சலுகையால் இது சாத்தியமானது. வருமான வரிச்சட்டத்தின் 87A பிரிவின் கீழ் இந்த விலக்கு கிடைக்கும். இது இந்தியாவின் வளர்ந்து வரக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.