குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, நகரின் கோதாதாரா பகுதியில், ஒரு இளம் ஜோடி கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 மாத கருவை இரக்கமின்றி சாலையில் வீசிவிட்டு தலைமறைவான சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம் ஜோடியை தீவிரமாக தேடி வருகின்றனர். அதோடு கருவை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோதாரா பகுதியிலுள்ள லக்ஷ்மிநாராயணன் சொசைட்டி வாயில் அருகில் கரு ஒன்று கிடப்பதாக காவலரிடம் மக்கள் தெரிவித்தனர். அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கருவை கைப்பற்றி அருகிலுள்ள சமீர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.