அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு(AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்பாக கடந்த ஜூன் 2021-ஆம் வருடம்  எண்ணெய் விலை உயர்வால் ரேஷனில் எண்ணெய் விநியோகத்தை அரசு நிறுத்தியது. அதே நேரம் எண்ணெய்க்கு பதில் கார்டு வைத்திருப்பவர்களின் கணக்கில் மாதம் ரூபாய்.250 அனுப்ப திட்டமிடப்பட்டது. தற்போது அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, அரசாங்கம் 250 ரூபாயை அதிகரிக்க பரிசீலித்து வருகிறது. முன்னதாக அரசு 250 ரூபாய் வழங்கி வந்த நிலையில் ,தற்போது இத்தொகையை ஹரியானா அரசு ரூ.300 ஆக உயர்த்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இம்மாற்றத்தின் பலன் BPL,AAY ஆகிய ரேஷன் அட்டைகளுடைய 32 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் இவர்களுக்கு அரசிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.300 வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.