பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு வருமானம் என்பது உத்திரவாதம். இந்த திட்டத்தில் 7.1 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இதில் கூட்டு வட்டியின் பயனும் கிடைக்கும். இந்த திட்டத்தில் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மார்ச் மாதத்தில் நிதி அமைச்சகத்தால் நிர்ணயம் செய்யப்படும்.

அதன்படி வருகிற மார்ச் 31-ம் தேதி அரசிடமிருந்து உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் வட்டி மற்றும் முதிர்வு காலத்தின் போது பெறப்படும் தொகைக்கு வரி விலக்கும் உண்டு. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 16 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு 7-வது ஆண்டிலிருந்து தான் பகுதி அளவு திரும்ப பெற முடியும்.