இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், ஆளும்கட்சியான கன்செர்வேடிவ் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சி தலைவர் நதிம் ஸகாவி, கடந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நாட்டின் கருவூலத்துறை தலைவராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், அவர் வரி மோசடியை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் பிரதமருக்கு கடும் நெருக்கடியான சூழல் உண்டானது. இதனையடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து நதிம் நீக்கப்படுவதாக பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து பிரதமர் எழுதியிருந்த கடிதத்தில், தங்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒருமைப்பாடு, தொழில்முறை, பொறுப்புக்கூறல் போன்றவை இருக்கும் என்ற வாக்குறுதிப்படி ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை இருந்தது என குறிப்பிட்டிருக்கிறார்.