அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது. மார்ச் 1 ஆம் தேதி முதல் H1B விசா விண்ணப்பங்களை பெற துவங்குவதாக வெளியான தகவல், நீண்ட நாட்களாக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியை தருகிறது. விசாவுக்கு விண்ணப்பித்தால் அது கிடைத்துவிடுமா என தெரியாது என்ற போதிலும், விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது திறக்கப்படுகிறது. இது பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

H1B விசா ஒதுக்கீடுகளானது வருடத்திற்கு 85000 விசாக்கள் எனும் அளவில் வரையறுக்கப்பட்டு உள்ளது. அதில் 20,000 விசாக்கள் அமெரிக்க நிறுவனங்களில் உயர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2023-24 நிதி ஆண்டுக்குரிய H1B விசாவை தாக்கல் செய்யக்கூடிய சீசன், மார்ச் 1ஆம் தேதி துவங்கும். இந்நிலையில் அமெரிக்க குடியேற்ற அமைப்பு, திறமையான வெளிநாட்டு தொழிலாளர் விசாக்களுக்கான விண்ணப்பங்களை பெற துவங்கும். இந்த தினத்துக்காக பல்வேறு இந்திய ஐ.டி நிபுணர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.