உலகில் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா. 2712 அடி கொண்ட புர்ஜ் கலிப்பா 160 தளங்களை கொண்டுள்ளது. இந்த பொறியல் அதிசயம் ரிக்கடரில் 8 புள்ளியில் பதிவாகும் கடுமையான நிலநடுக்கத்தை கூட தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் இப்பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டபோது புர்ஜ் கலிப்பா கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கு காரணம் இதன் கட்டுமானம் முக்கோண வடிவிலான கனமான காங்கிரட்டாலும் வளமான ஸ்டில்களால் அமைக்கப்பட்டிருப்பது ஆகும். மேலும் அமெரிக்காவின் கனமான ரப்பர் மற்றும் ஸ்டில்கள் மீதி கட்டப்பட்டுள்ள உட்டா தலைமைச் செயலகம், ஜப்பானின் யாக்கோனா டவர், கோலாலம்பூர் இரட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடங்கள் நிலநடுக்கத்தை எதிர்த்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.