உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் அமைந்துள்ள செக்டர் 27 பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 38 வயதான இன்ஜினியரும், அவரது 22 வயதான பிபிஏ படிக்கும் மாணவியான காதலியும் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ஹோட்டலில் கையேடு செய்துவிட்டு ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.

இதனை அடுத்து வெள்ளிக்கிழமை காலை அந்தப் பெண் குளியலறைக்கு சென்று வந்து பார்த்தபோது அவரது காதலர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் உடனடியாக ஹோட்டல் ஊழியர்களிடம் தகவல் கொடுத்துள்ளார்.அதன் பின்னர் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அந்த நபரை தூக்கில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணி நாயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இறந்தவரின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு புகாரும் காவல் நிலையத்தில் பதிவு செய்யவில்லை. இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.