ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். அதோடு நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்போது இப்படத்தின் சூட்டிங் தென்காசியிலுள்ள வனப் பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் போர் குறித்த காட்சிகளானது சோஷியல் மீடியாவில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.