டைரக்டர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடித்திருக்கும் படம்தான் “மார்டின்”. இந்த படத்தில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வசாவி எண்டர்பிரைசஸ் சார்பாக தயாரிப்பாளர் உதய்கே மேத்தா தயாரிப்பில், பிரமாண்டமான பான் இந்திய படமாக உருவாகி இருக்கும் இதற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடந்தது. இத்திரைப்படத்தின் டீசர் ஆக்ஷன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும் படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாக அமைந்திருந்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிய இப்படத்தின் டீசர் வெளியாகிய நாளிலிருந்து இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.