வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தில்ராஜு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியபோது விவி விநாயக் மற்றும் பிரபாஸ் போன்றோர் நான் தலைக்கனம் பிடித்தவர் என்று முதலில் நினைத்திருக்கின்றனர். எனினும் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்த பின்பு என் நிஜ கேரக்டர் அவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் மட்டுமின்றி என் மனைவி தேஜஸ்வினியும் கூட நான் தலைக்கனம் பிடித்தவன் என நினைத்திருக்கிறார்.

என்னுடன் பழகிய பிறகுதான் நான் மிகவும் கூல் என மனைவி கூறினார். தில்ராஜுவின் முதல் மனைவி அனிதா உடல்நல பிரச்சனை காரணமாக சென்ற 2016 ஆம் வருடம் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து தில்ராஜூ தனியாக வசித்து வந்தார். அப்போது அப்பா உங்களுக்கு ஒரு துணை தேவை. இதனால் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுங்கள் என அவரது மகள் வற்புறுத்தினார். அதனை தொடர்ந்து சென்ற 2020 ஆம் வருடம் தேஜஸ்வினி வைகா ரெட்டியை தில்ராஜு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

2-வது திருமணம் குறித்து தில்ராஜு கூறியிருப்பதாவது, என் முதல் மனைவி இறந்தபின் 2 வருடங்கள் மிகவும் துயரமாக இருந்தது. என்னை புரிந்துக்கொள்ளும் ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும், இல்லையெனில் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும் என நினைத்தேன். அப்போதுதான் தேஜஸ்வினியை சந்தித்தேன். அவர்தான் எனக்கு பொருத்தமானவர் என முடிவு செய்து திருமணம் செய்து கொண்டேன் என்றார்