தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்ததாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னெடுப்பில், தமிழகத்தில் மொத்தம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
அதில் 31 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் பல முதலீடுகள் கொண்டுவரப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால் அவற்றின் மாற்று விகிதத்திற்கும், தற்போதைய மாற்று விகிதத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. சமீபத்தில் முதலமைச்சர் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார். அதை வைத்து மட்டுமே 100% மாற்று விகிதம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.